அரிசியின் விலையை குறைக்க முடிவு

0
432

வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைக்கப்படும் என்று சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். ஒருகிலோ வெள்ளைப்பச்சரிசி 65 ரூபாவிற்கும் ,ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கு சதொசவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.

 

அரிசியை இறக்குமதி செய்வதற்காக திறைசேரியின் செயலாளர் தலைமையிலான கேள்விப்பத்திர குழுவொன்றை நியமிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று குறிப்pபட்டதுடன் மேலும் இம்மாதத்தில் மேலும் 30 சதொச கிளைகள் திறக்கப்படவுள்ளதாகவும் கலாநிதி கே.பி.தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்