கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு காப்பு அணிவிப்பு

0
923

(படுவான் பாலகன்) இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் மிக முக்கியமான விரதமாக கருதப்படும் கேதார கௌரி விரதத்தின் இறுதிநாள் பூசையும் காப்பணியும் நிகழ்வும் இன்று(19) வியாழக்கிழமை வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
கடந்த 30ம் திகதி விரதம் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக அடியார்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. சிவபெருமானை நோக்கி அனுஸ்டிக்கப்படும் இவ்விரதத்தினை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நோற்றனர்.
விரதத்தின் இறுதிநாளாகிய வியாழக்கிழமை, சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில் பூசை ஆராதனைகள் நடைபெற்றதனை தொடர்ந்து விரதம் நோற்றவர்கள், தங்கள் கைகளில் காப்பணிந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.