வடகிழக்கு பிரதேசத்தில் தனித்து தனித் தமிழ் தரப்பினராக போட்டியிட்டு அரசியல் வெற்றிடங்களை நிரப்ப எதிர்பார்ப்புடன் செயற்படவுள்ளோம்

0
1054
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால தேர்தல் திட்டங்கள் தொடர்பாக பல கட்சிகள் அடிப்படையில் சந்திப்புகளின் முதற்கட்டமாக இலங்கை பொது ஜன பெரமுனயின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நேற்று 17 பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை பொது ஜன பெரமுனயின் காரியாலத்தின் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்..

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்……..
எதிர்கால தேர்தல் திட்டங்கள் தொடர்பாக பல கட்சிகள் அடிப்படையில் சந்திப்புகளின் முதற்கட்டமாக இலங்கை பொது ஜன பெரமுனயின் அழைப்பில் முன்னாள் பொருளாதார மற்றும் அபிவிருத்தி அமைச்சரும் கட்சியின் தேசிய இணைப்பாளருமான பஷில் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர்களுக்கிடையிலான சந்திப்பு  நடைபெற்றது. இது ஒரு ஆக்கபூர்வ சந்திப்பாக அமைந்திருந்தது.
இதன் போது எமது கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாகவும் நடைபெறவிருக்கும் தேர்தல் சட்டமூலங்கள் தேர்தல் வலயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதில் நாம் ஆணித்தனமாக கூறினோம் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் வடகிழக்கு பிரதேசத்தில் தனித்து தனித் தமிழ் தரப்பினராக  போட்டியிட்டு அரசியல் வெற்றிடங்களை நிரப்ப எதிர்பார்ப்புடன் செயற்படவுள்ளோம் என கூறினோம் அதற்கு அவர்களும் உடன்பட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் முக்கியமான விடயங்கள் மாகாணசபைத் தேர்தலில் 50 : 50 விகிதாசார அடிப்படையில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுகின்றது அதில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் 5 உருப்பினர்கள் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ளனர் ஆகையால் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றித்து செயற்படும் சூழ்நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் இத்தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்க நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் ஓர் பக்கச்சார்பாக நியமித்திருக்கின்றார்கள். தமிழருக்கு அதில் இடம் கொடுக்கப்படவில்லை முஸ்லீம் சிங்கள இனத்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் நாங்கள் கூடிய கவணம் செலுத்தி தேர்தல் விடயங்களில் செயற்படவுள்ளோம் என தெரிவித்தார்.
 இச்சந்திப்பின் போது செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான எஸ்.வசந்தன் கட்சியின் பொருளாளர் கே. உதயகுமார்  மற்றும் கிரான் பிரதேச அமைப்பாளர் கே.பத்ம யோகன்  கட்சி உறுப்பினர் என் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.