இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கத் தவறியதாலேயே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

0
601
இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கத் தவறியதாலேயே  பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கன் நெருக்கடி நிலைமைக்கு உள்ளாக நேர்ந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தொவித்தார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பிரதேசங்களை சேர்ந்தவர்களை காலம் தாழ்த்தாமல் விடுவிக்குமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்  நேற்று முன்வைத்திருந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றுகையிவேயே இவ்;வாறு குறிப்பிட்டார்.
20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை அவர்களின் கோரிக்கைக்கு அமைய வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தாமல் சிங்கள மொழியில் வழக்கை விசாரிக்கும் ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றுவதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர் அந்த  பிரேரணையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் அடிப்படை உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளது, இவர்கள் பல வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருவதால் அவர்களது குடும்பங்களின் வருமானமும் இல்லாமல் போயுள்ளது. அதனால் அவர்களை விடுதலை செய்வதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் குறித்து சர்வதேச பிரமானங்களுக்கு அமைவாள விடயங்களை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு விடுதலை, செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லையென அரசாங்கம் கூறமுடியாது பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையில், பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என 2015ஆம் ஆண்டு அரசாங்கம்  உறுதியளித்திருந்தது. இந்த வாக்குறுதிக்கு அமைவாக அச்சட்டம் நீக்கப்பட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையிலான புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட காலத்தில் தண்டனை  வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் இன்று விடுதலை பெற்றிருப்பர். ஆனால் அவ்வாறு உரிய காலத்தில்  தண்டனை வழங்கப்படாததால், அவர்கள் இன்று தண்டனைக்காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் அரசியல் காரணங்களுக்காக சில செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் தேசிய இனப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்கியிருந்தால், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்றும் எதிர்க்கட்சித்தரைவர் இரா சம்பந்தன் மேலும் தொவித்தார்.