தமிழால் இணைவோம் 2017.

0
682

எங்களால் முடியும், ஆற்றல்களுக்கான ஆற்றுகை அரங்கச் செயற்பாடு தமிழால் இணைவோம் என்ற கருப்பொருளில் இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும் மணம் பரப்ப மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் நேற்றையதினம் வியாழக்கிழமை (12) மாலை கலாசாலை முதலவர் ஏ.எஸ்.யோகராஜா தலைமையில் நடைபெற்றது.

கலாசாலை முதன்மொழி தமிழ் கற்கை நெறி இணைப்பாளர் கலாநிதி எம்.பி.ரவச்சந்திராவின் வழிப்படுத்தலில் நடைபெற்ற தமிழால் இணைவோம் நிகழ்வில்,  மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வி கனகசூரியம் அகிலா , கிழக்குப்பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை விரிவுரையாளர் கலாநிதி வ.குணபாலசிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் கலாசாலை பிரதி அதிபர் வி.பரமேஸ்வரன் உட்பட ஏனைய கற்கை நெறி இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், பகுதி நேர விரிவுரையாளர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

கலாசலை ஆரம்பித்து 71 வருட வரலாற்றில் முதன் முறையாக பாரம்பரிய தமிழ் இன்னிய அணி உருவாக்கப்பட்டு (பாண்ட் குழு) ஊர்வலத்துடன் அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.

முதன் மொழி தமிழ் கற்கை மாணவர்கள் 62 பேரினால் கலாசார நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

அரங்க வணக்கத்துடன் ஆரம்பமான இவ் விழாவில், கோலாட்டம், கும்மி, காவடி, பறையாட்டம், நாடகம் யதார்த்தம், வரலாற்று நாடகம் – அழியாச்சரித்திரம் கவிதை அரங்கு, வழக்காடு மன்றம், பஞ்சாயத்து, இசைக்கோர்வை. பாரம்பரியமும் பரதமும், கதம்பம், இலக்கிய நயம், எனப் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந்நிகழ்வினை கலாசாலை முதன்மொழி தமிழ் கற்கை நெறி இணைப்பாளர் கலாநிதி எம்.பி.ரவச்சந்திரா நெறியாழ்கை செய்திருந்தார்.