சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும்

0
578
தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி விசேடமாக  மேல், சப்ரகமுவ, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடம்பெறக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது,