சுவீஸில் கொல்லப்பட்ட எங்கள் அப்பாகொலையின் விசாரணையினை நாங்கள் நேரில் பார்க்கவேண்டும்!

0
1107

சுவீஸில் பொலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆனந்தபுரத்தினை சேர்ந்த கரன் என்பவரின் வீட்டிற்கு இலங்கைக்கான சுவீஸ்தூதுவராலயத்தின் அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள தூதரகத்கதில் பணியாற்றும் வடக்கு கிழக்கு அரசியலுக்கு பொறுப்பான சுசந்தி கோபாலகிருஸ்ணன் என்ற பெண் அதிகாரி நேரில்சென்று பார்வையிட்டுள்ளதுடன் விபரங்களை கேட்டறிந்துள்ளார்.

சுவிசில் சுட்டுக்கொல்லப்பட்ட கரன் தொடர்பான  மேலதிக விபரங்கள் எதுவும் கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு கிடைக்கவில்லை என்றும் இதுதொடர்பில் ஆராய்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர் கரனின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இன்னிலையில் இந்த தூதரகஅதிகாரியின் கருத்துப்படி கரன் என்பவரை சுட்டுக்கொன்றது பிளைதான் என்பதையும் சுட்டுக்கொல்லும் அளவில் அந்த நாட்டில் சட்டம் இல்லை என்றும் குடும்பத்திற்கு என்ன தீர்ப்பு வேணும் என்றும் வினாவியுள்ளார். அதற்கு இவரின்குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இவரின் உடலம் இலங்கைக்கு கொண்டுவந்தால் அவரின் இறுதிசடங்குகள் செய்து அவ்வாறே முடிந்துவிடும் அதனால் எந்ததீர்ப்பும் சொல்லமாட்டார்கள் இங்கிருந்து அவரது துணைவியினையும் இரண்டுபிள்ளைகளையும் சகோதரங்களையும் சுவீசிற்கு அழைத்து அங்கு நீதிமன்றில் நடைபெறும் விசாரணையின் படியான தீர்ப்பில் அதற்கு பின்னர் அங்கு இறுதிக்கிரியை செய்வதா அல்லது இலங்கைக்கு கொண்டுவந்து இறுதிக்கிரியைசெய்வதா என்று பிள்ளைகள் கோரியுள்ளார்கள்.

இவர்கள் தெரிவித்த இந்த கருத்தினை தூதரக அதிகாரிக்கு தான் தெரிவிப்பதாகவும்  ஏதுவாக இருந்தாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றேன் என்றும் இதுதொடர்பில் எழுத்துமூலமான ஆதாரம் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறும் தெரிவித்துவிட்டு அவர் சென்றுள்ளதாக பிள்ளைகள் தெரிவித்துள்ளார்கள்..