வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே எனது குறிக்கோள்

0
612

முல்லைத்தீவு மாவட்டத்தில் 188 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தனதாக்கிய ம.கர்சனா

எனது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் ஆகியோரின் உதவியுடன் கற்றதால் நான் பரீட்சையில் சித்தியடைந்தேன்

நான் தரம் 1 2 3 ஆகியவற்றை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் கற்றேன். நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்று  முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தினை பெற்ற புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியா சாலை மாணவி  ம.கர்சனா தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில் தெரவித்தார்.

இவர் மேலும் தெரிவிக்கையில்

எனது எதிர்கால இலட்சியம் வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே ஆகும் விடாமுயற்ச்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதிலும் சாதிக்கலாம் இதேபோன்று க.பொ.த(சா/த), க.பொ.த(உ/த)ஆகியவற்றிலும் திறமை சித்திகளை பெற்று எதிர்காலத்தில் வைத்தியராக வருவேன் என்று தெரிவித்தார்

 

அத்தோடு பாடசாலையில் கற்றவற்றை மீட்டுப் பார்ப்பதுடன் மீண்டும் மீண்டும் பயிற்ச்சிகளை செய்வதன் மூலமாகவும் திறன்களை வளத்துக்கொள்வதன் மூலம் வெற்றி இலக்கை அடைய முடியும் எனவும் தமது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார்