கிள்ளியும் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பதுபோல் புதிய அரசியலமைப்பு – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா

0
733

ஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருந்தால், இந்த மக்கள் அனைவரினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பன்மைத்தன்மை, பல் சமய நல்லிணக்கத்தையும், உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை இதய சுத்தியுடன், ஆட்சியாளர்கள் முன்வைக்க வேண்டும் என்று கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள உப குழு அறிக்கை தொடர்பாக கலந்துரையாடும் போதே இந்தக்கருத்தை கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா வெளியிட்டுள்ளார்.
அவரது நேர்காணலில் முழுவடிவம்,
அரசியலமைப்பு உபகுழு அறிக்கை தொடர்பில் உங்கள் அபிப்பிராயம் என்ன?
கிள்ளியும் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பது போல காட்டுகின்ற செயற்பாhகவே அமைந்துள்ளது இந்த அரசியலமைப்பு உபகுழு அறிக்கை. இது பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுடைய அபிலாசைகளுக்கு ஒரு போதும் தீர்வாக மாட்டாது. மேலும், சர்வதேச தலையீட்டை அரசாங்கம், தானாக விரும்பி உள்ளே அழைப்பதற்கு ஒப்பாகும். யானை தன் கையாலேயே தன் தலைக்கு மண் அள்ளிப் போடுகிற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருகின்றது.

மாகாண அதிகாரங்கள் இந்தப் புதிய அரசியலமைப்பில் எவ்வாறிருக்கும்? எத்தகைய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.?
இரண்டு மாகாணங்கள் தொடர்பான இணைப்புப்பற்றியும், அது தொடர்பான மக்களுடைய அபிலாசைகள் பற்றியும் ஆரோக்கியமான கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுடைய அபிலாசைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வாக கருத்தில் கொள்வதற்கு அதிகாரப்பரவலாக்கலில் எதுவுமில்லை. பொலிஸ் அதிகாரம் பற்றி பெரிதாகக் குறிப்பிட்டுள்ள போதும், அதனுடைய கடிவாளம் முழுவதும்,மத்திய அரசிடமே உண்டு. சிறு குற்றங்களைக் கண்டறிவதற்கு அதிகாரம் உள்ளதே தவிர, ஏனையவை அனைத்து மத்திய அரசிடமே உள்ளது.
ஆனால், மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், இந்த அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் ஒப்பிடும் போது யானைப்பசிக்கு சோளப் பொரி போட்டுள்ளதுபோல் தென்படுகின்றது.
மாகாண அமைப்புக்களின் பெயரால், சிறு குற்றங்களைக் கண்டறிவதற்காக நியமனம் பெறும் பொலிசாருக்கு தான் சார்ந்த மாகாணங்களின் பதாதைகளை அடையாளப்படுத்துவதற்கான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளது .
காணி சார் அதிகாரங்கள் எவ்வாறிருக்கின்றன?
காணி சார்ந்த அதிகாரங்கள் தெளிவற்ற தன்மையுடையதாக இருக்கின்றன். எனவே அது தொடர்பான தெளிவான தீர்க்கமான வரையறைகள் முன்வைக்கப்பட வேண்டும். வலது கையால் கொடுத்து இடது கையால் பறிக்கும் பொறிமுறையொன்று பின்பற்றப்படுவது ஆரோக்கியமானதல்ல.

நிதித்துறையில் அதிகாரங்களும் இந்த உபகுழு அறிக்கையில் உள்ளது தானே.?

நிதித்துறை தொடர்பாக வெளிநாட்டு நிதிகளைக் கையாளும் அதிகரரங்கள் பரிந்துரைக்கப்படவில்லை. மத்திய அரசின் ஊடாகவே நிதிப்பரிபாலனம் முன்வைக்கப்படுகிறது. மாகாண சுயாதீன அபிவிருத்தி என்பது அந்த அந்த மாகாணங்களில் காத்திரமான அபிவிருத்திக்கான முன்னெடுப்புகளுக்கு இது தடையாக அமையும். இது பற்றிய விரிவானதும் தெளிவானதுமான அறிக்கைகள் மக்களுக்கு முன்வைக்கப்பட வேண்டும்.

இராட்சிய சபை உருவாக்கம் முக்கயமானதாகத்தானே பார்க்கப்படுகிறது. இது எவ்வாறிருக்கிறது?
குறைந்தது 3 கிராம சேவகர் பிரிவுகளை இணைத்து இதனை உருவாக்குதல் பற்றிக் குறிப்பிட்டுள்ள போதும் அதனுடைய அதிகாரங்கள் தெளிவு படுத்தப்படவில்லை. ஆயினும். அவற்றை மாகாண சபைகள் கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளன. தீர்வு முன்மாழிவில், இராட்சிய சபைகளுக்கே முக்கியம் கொடுப்பதாக பல இடங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது பழைய மாவட்ட சபை முன்மொழிவுகளை விடக் குறைந்த அதிகாரங்களைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. மக்களுடைய அபிலாசைகள் எண்ணங்கள், இவற்றை இவை எந்தளவுக்கு பூர்ததி செய்யும் என்ற சந்தேக்தினை முன்னெடுத்துள்ளது.
ஒற்றையாடசி தொடர்பாக மிக இறுக்கமான பாதுகாப்பு பரிந்துரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அந்தப்பரிந்துரைகளுக்கு ஏற்ற அளவிலான அதிகாரங்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பரிந்துரைகள் பரிந்துரைக்கப்படவில்லை. பொருளாதார? கல்வி உல்லாசப்பயணத்துறை தொடரிபில் தெளிவான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை.

பாதுகாப்புத் திருத்தச் சட்டங்கள தொடர்பாகமுன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் எவ்வாறிருக்கின்றன. ?

ஒருவருடைய தனிப்பட்ட கைது, தடுத்து வைத்தல், விசாரணைகள் தொடர்பாக தெளிவான கால நிர்ணயங்கள் முன்வைக்கப்படவில்லை. எனவே வலிசுமந்த இனங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள இந்த உப குழு அறிக்கையானது, அவர்களது இயல்பான அபிலாசைகளை எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யமாட்டாது, இது பெரும்hன்மை மக்களுடைய சிந்தனைகளை விட அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் இனத்துவ அரசியல்சார்ந்த கருத்தாகவே நோக்க வேண்டியுள்ளது.
இந்த முன்மொழிவு ஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருந்தால், இந்த மக்கள் அனைவரினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பன்மைத்தன்மையும், பல் சமய நல்லிணக்கத்தையும், உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை இதய சுத்தியுடன், ஆட்சியாளர்கள் முன்வைக்க வேண்டும். தங்கள் அரசியல் அதிகாரங்களுக்காக, தங்களுக்கு வாக்களித்த மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி இந்த இலங்கைத்திருநாட்டை தொடர்ந்தும் இரத்த ஆறாக மாற்றுகின்ற முயற்pசகளை ஆட்சியதிகாரமுடையவர்கள், மேற்கொள்வதை இலங்கைத் தாய் நாட்டை நேசிக்கும் இலங்கைச் சமூகத்தவர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்க்ள. இந்த நிலைப்பாட்டையே சர்வதேச சமூகம் எதிர்பார்;த்து நிற்கின்றது. எனவே ஆட்சியாளர்கள். குறுகிய அரசியல் போதங்களை மறந்து நியாயமானதும், தீர்க்கமானதும், நல்லிணக்கமானதுமான சர்வதேச தலையீடற்ற ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான தீர்க்கமான சிறந்ததான, ஆரோக்கியமான, தீர்வினை முன்மொழிவதன் மூலம், இலங்கைப் பல்லிணக்கச் சமூகம் சுயாதீனத்துடனும், இறமையுனும், தன் தாய் நாட்டை நேசிக்கின்றதுமான அதிகாரங்களைப் பெற்று;க கொள்ள முடியும்.
அவ்வாறான சூழலிலேயே தான் இலங்கையின் பெருளாதாரமீட்சியும், சுதந்திரமும், இறமையும், தன்னாதிக்கத்தையும் கட்டியாளக்கூடிய சூழ்நிலையை இந்த இலங்கைத்திருநாடு அனுபவிக்கும். எனவே , இது எமது நாடு, எமது தேசம், என்ற உணர்வுபூர்வமான கொள்கை உறுதிப்பாட்டுடன் ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும்