தாயையும், பிள்ளையும் இனங்காண முடியாத நிலை.

0
1087

(படுவான் பாலகன்) தாயையும், பிள்ளையும் இனங்காண முடியாத நிலையே தற்காலத்தில் இருக்கின்றது. என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வினை, உக்டா மற்றும் வேள்விஸன் நிறுவனம், செவ்வாய்க்கிழமை நடாத்திய போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
முப்பது வருட யுத்தத்திலே பலவற்றினை இழந்திருக்கின்றோம். இழந்தவைகளை பெறுவதற்கு, மீண்டும் பழைய இடத்திற்கு செல்லவேண்டும். தற்காலத்தில் பிள்ளைகள் தொலைபேசியுடனும், தொலைக்காட்சியுடனுமே பேசுபவர்களாக இருக்கின்றனர். முன்னைய காலத்தில் முதியோர்களிடமே பிள்ளைகள் பேசினர். இதனால் பலவற்றினை அறிந்து கொண்டனர். முதியோர்கள் என்பவர்கள் பொக்கிசங்கள், அப்பொக்கிசத்திலிருந்து தகவல்களை, அனுபவங்களை பெறுவதற்கு பிள்ளைகளை முதியோர்களுடன் உரையாட விட வேண்டும்.
சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு பெண்பிள்ளைகள் அணியும் ஆடைகளும்; காரணமாயிருக்கின்றன. பிள்ளைகளை ஒழுங்காக வழிநடத்த வேண்டிய பொறுப்பும் பெற்றோருக்கு இருக்கின்றது. பெற்றோரை அவதானித்தே பிள்ளைகளின் நடத்தைகளும் இருக்கின்றன. தற்போதைய சூழலில் சிலநேரங்களில் பிள்ளைகளையும், தாயையும் இனங்காண முடியாத தருணங்களும் ஏற்படுகின்றன. தாய்க்கான உடையுடன் தாய் இல்லாமையே இதற்கு காரணமாகும். இன்று பலர் அரைகுறை ஆடைகளை அணிவதனையே அவதானிக்க முடிகின்றது. பெறுமதி வாய்ந்த பொருட்கள் எல்லாம் மறைக்கப்பட்டே காணப்படும், குறிப்பாக வைரம் பெறுமதியானது, இது மறைந்திருக்கும் பொருளாகும். அதே போல உடலும் பெறுமதி வாய்ந்தது, அதனால்தான் மறைக்கப்பட்டிருக்கின்றது. என்றார்.