கல்லடிப் பாலத்தில் பாரிய விபத்து சம்பவம்

0
1195

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெறுள்ள நிலையில், விபத்தில் சிக்கியவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்

இச் சம்பவம் இன்று மாலை 7 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வேன், கார்  மற்றும் மோட்டர் சைக்கிள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த பாரிய விபத்து சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் எங்கு சென்றுள்ளார் என்று தெரியாத நிலையில் பொலிஸார் தேடுதலை நடத்தி வருகின்றனர் .

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு  பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்னர் கல்லடி பாலத்தில் பாரிய விபத்து – விபத்துக்குள்ளானவரை தேடும் பொலிசார்

Posted by Uthayakanth Uthayakumar on Sunday, 1 October 2017