யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை

0
455
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  அவற்றில் வசதிகளும் விரிவுபடுத்தப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்..
 இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவக்கையில் நாட்டில் சிறுவர்களின் சுகாதார நலனை மேம்படுத்துவதற்கு மேலும் மூன்று சிறுவர் வைத்தியசாலைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் கூறினார்.
தாய்-சேய் வைத்தியசாலைகள் பல நாடு முழுவதிலும் அமைக்கப்பட உள்ளன. இதற்கு மேலதிகமாக இலவச சுகாதார சேவையை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியிருப்பதாக கூறிய அமைச்சர், பொதுமக்களுக்கு சௌபாக்கியமிக்க வாழ்க்கையை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதே அரசாங்கம் முக்கிய நோக்கம் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.