தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்ட கட்சி உறுப்பினர்களின் சந்திப்பு.

0
735

(டினேஸ்)

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்ட கட்சி உறுப்பினர்களுக்கான சந்திப்பு இன்று 30 விழிப்புணர் அற்றோர் கலந்துரையாடல் மண்டாபத்தில் நடைபெற்றது..

திருமலை மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஏ. கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது புத்திஜீவிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெண்கள் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அடங்களாக பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது தற்போது திருகேணமலை மாவட்ட அரசியல் நிலை பற்றியும் ஏனைய கட்சிகளின் சுயநல அரசியல் போக்கு தொடர்பாகவும் சிறுபான்மை மக்களை ஏமாற்றும் அரசியல்  பற்றியும், கடந்தகால யுத்தத்தினால்  விதவைகளாக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியானது எதிர் காலத்தில் பல உதவிகளை மக்களுக்கு செயற்ப்பட உள்ளதாகவும் அதன் பிரகாரங்கள் எமது அரசியல் கொள்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்
மாவட்ட  இணைப்பாளர் எஸ்.ஏகிருபாகரன் கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் க‌ருத்து தெரிவிக்கையில்………

எமது தமிழ் ச‌மூக‌மான‌து எதிர்கால‌த்தில் த‌லைநிமிர்ந்து நிற்கும் சூழ்நிலை உருவாகுவ‌த‌ற்கான‌ வழிகள் பிறக்கும் என்பதில் நம்பிக்கையுள்ளது. எமது த‌மிழ‌ர்க‌ளுக்கு நாங்க‌ள் ஒரு முன்மாதிரியாக‌ திக‌ழ‌ ஆசைப‌டுகின்றோம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். ஏன்னெனில் எங்க‌ள் க‌ட்சியின் த‌லைவ‌ர் விநாய‌க‌ மூர்த்தி முரளிதரன் கருணா அம்மான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அவ‌ரின் எதிர்கால‌ திட்டங்களின் அடிப்படையில்  நாங்க‌ள் எங்க‌ள‌து ம‌க்க‌ளின் அபிலாசைக‌ளைப் புரிந்து கொண்டு அவ‌ர்க‌ளுக்கான‌ அடுத்த‌ க‌ட்ட‌ அனைத்து அரசியல் நன்மைகளையும் வாழ்வாதார‌ உத‌விக‌ளையும் செய்வோம் என் உறுதி அளித்துள்ளார்.