இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 40 வீதமானவை இருதயத்துடன் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படுகின்றது

0
598

இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 70 வீதமானவை தொற்றா நோய்களினாயே ஏற்படுகின்றன. இதில் 40 வீதமானவை இருதயத்துடன் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படுகின்றது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுத்தின் தெரிவித்தார்.

உலக இருதய தினத்தையொட்டி கல்முனையில் இடம்பெற்ற மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு உரை நிகழ்த்தும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலங்களில் தொற்றா நோய்களின் தாக்கம் இலங்கை போன்ற அபிவிருத்தி அமைந்துவரும் நாடுகளிலும், உலக நாடுகளிலும் மிக அதிகமாக காணப்படுகின்றது. இந்நிலைமையினை கருத்திற்கொண்டு ஐக்கிய நாடுகள் தாபனம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி உலக இருதய தினமாக பிரகனப்படுத்தி இத்தினத்தை அனுஷ்டித்தும் வருகின்றதுஎன்றார்..