வெற்றிலை செய்கையாளர்கள் புதிதாக தோட்டம் அமைப்பதாயின் பிரதேச சபையிடம் அனுமதி பெறவேண்டும்.

0
452
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக  பிரிவுக்கு உட்பட்ட வெற்றிலை செய்கையாளர்கள் புதிதாக தோட்டம் அமைப்பதாயின் பிரதேச சபையிடம் அனுமதி பெறவேண்டும். என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் அமீரலி, பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அனைத்து திணைக்களம் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெற்றிலை செய்கையாளர்கள் தினமும் விசுறும் கிருமிநாசினிகளினால் அருகாமையிலுள்ள குடியிருப்பாளர்கள் மிகுந்த சிரமத்தினை எதிர் நேக்கிவருகின்றனர்.  தினமும் குடியிருப்பாளர்கள் நஞ்சு கலந்த காற்றினை சுவாசிப்பதனால் பலதரப்பட்ட சுவாசம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு வாய்பு உள்ளதாக  முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதற்கு இக் கூட்டத்தில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என  கூட்டத்தில் கலந்து கொண்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் சுட்டிகாட்டியிருந்தார்.
    இதனைத் தொடரந்து  சம்பந்த அதிகாரகளை இணைத்தலைவர்கள் வினாவியிருந்தனர். இது தொடர்பில் விவசாள திணைக்கள அதிகாரி பதிலளிக்கையில். உண்மையில் வெற்றிலை செய்கையின் போது கிருமிநாசினிகள் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை பலதடைவள் சுட்டிக்காட்டியிருந்தும்  தொடர்ந்து இதனை பாவித்து வருகின்றனர் என அவர் இதன்போது பதிலளித்தார். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத என இணைத்தலைவர்களால் கேள்வி தொடுக்கப்பட்டது இதற்கு அவ்வாறான அதிகாரம் எங்களிடம் இல்லை என அவர் இதன்போது பதிலளித்தார்.
      குறித்த விடயம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதா? என மேலும் இணைத்தலைவர்களால் வினாவப்பட்டது இதற்கு பொதுச்சுகாதார பரிசோதகர் பதிலளிக்கையில் எங்களுக்கு இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இதற்கான பயிற்சிகளை வழங்கவில்லை எனவே இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எங்களால் எடுக்கமுடியாது என தெரிவித்தார். இதனைத் தொடரந்து மத்திய சுற்றாடல் அதிகாரியிடம் வினாவப்பட்டவேளை இது தொடர்பில் எனக்கு இதுவரை முறைப்பாடு ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
   இவை அனைததையும் கேட்டறிந்த இணைத்தலைமைகள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு  இனிவரும் காலங்களில் வெற்றிலை செய்கையாளர்கள் தோட்டங்கள் அமைக்கும் இடம் தொடர்பில் பிரதேச சபையிடம் அனுமதியை பெற்றே அமைக்கவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்திருந்தனர். குறித்த ஆலோசனை கலந்து கொண்ட அனைவரும்  சம்மதம் தெரிவித்ததை அடுத்து அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது…