சமையல் எரிவாயுவின் விலை ரூ 110 இனால் அதிகரிப்பு

0
635
வீட்டு பாவனைக்காக பயன்படுத்தப்படும் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை, ரூபா 110 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிவாயு நிறுவனங்களினால் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இவ்விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் சிந்தக லொகு ஹெட்டி தெரிவித்தார்.
குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில், நிதியமைச்சின் அங்கீகாரத்திற்கு அமைய, நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.