ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேலுக்கு கௌரவிப்பு.

0
584

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது.

கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் ரி.திருநாவுக்கரசு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மதகுருமார், கிரான் உதவிப் பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா உத்தியோகஸ்தர் கீர்திகா, மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், உட்பட இன்னும் பல சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சுயாதீன ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் அவர்கள் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வடிவேல் சக்திவேல் அவர்கள் கடந்த 10 வருடகாலமாக சுயாதீன முழுநேர ஊடகவியலாளராக இருந்துகொண்டு செய்திதிகள் மற்றும் கட்டுரைகளையும், எழுதிவருகின்றார்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐந்து ஊடக அமைப்புக்கள் வழங்கிய விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த மக்கள் சேவை ஊடக விருதையும், 2013 ஆம் ஆண்டு களுமுந்தன்வெளி விநாயகர் கலைக்கழத்தினால் சிறந்த பிரதேச ஊடகவியலாளர் விருதையும், 2016 ஆண்டு யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பாக அறிக்கையிடும் நிறுவனத்தினால் சிறந்த கட்டுரையாளருக்கான விருதையும், 2017 ஆம் ஆண்டு களுவதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தினால், சிறந்த ஊடகவியலாளருக்கான விருதையும் பெற்றுக் கொண்ட இவர் கடந்த வியாழக்கிழமை (21) மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வின்போதும் பொன்னாடை போர்த்தி சான்றிழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஊடகத்துறையில் இருந்த கொண்டு மக்களின் பிரச்சனைகள் உடனுக்குடன் செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், வெளிக்கொணர்ந்து வரும் இவர் சமூக சேவையிலும் சிறந்து விளங்குகின்றமை குறிப்பிடத்தக்தாகும்.