ஐந்தாவது இடத்தில் இருந்தோம் கடந்த இரண்டு வருடங்களாக கீழ் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

0
1115

கிழக்கு மாகாணத்தின் ஆரம்பக்கல்வி நிலைமையும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மகிழ்ச்சியடையக் கூடியதாக இல்லை என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் (19.9.2017) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வைத்து மாகாண ரீதியாக தரப்படுத்தினால் கடந்த 2015ம் ஆண்டு 63 வீதமாகவும் 2016ம் ஆண்டு 61 வீதமாகவும் மாகாணத்தின் பெறு பேற்று நிலைமை காணப்படுகின்றது.

மாகாண ரீதியில் இந்த பெறுபேற்றை பார்க்கின்ற போது 9 மாகாணங்களில் 9வது மாகாணமாகத்தான் கடந்த இரண்டு வருடங்களிலும் கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.

ஆகவே இந்த நிலைமைகளை பார்க்கின்ற போது இங்கு ஆரம்பக் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

ஆரம்பக்கல்வி அபிவிருத்தி வேலைகளுக்காக பல வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வருகின்றன.

பெறுபேறுகளை நாங்கள் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் நாங்கள் பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம்.

மட்டக்களப்பு வின்சண்ட மகளிர் உயர்தர பாடசாலை போன்ற பிரபல்யமான பாடசாலைகள் சராசரியை விட அதிகமான நிலைமையை பெறு பேறுகளில் காட்டுகின்றார்கள்.

எனினும் பரவலான கல்வி வளர்ச்சி என்பது கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டியது என்பது கல்வியலாளர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் விருப்பமாக இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை பெறு பேறு நிலைமையும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நிலைமை போன்று தான் காணப்படுகின்றது.

2015ம் மற்றும் 2016 ஆண்டுகளில் உயர்தரத்திற்கு சித்திபெறக் கூடிய மாகாணவர்களின் விகிதாசாரம் 61 வீதமாகதான் காணப்படுகின்றது.

ஆனால் இந்த வின்சண்ட மகளிர் பாடசாலையினுடைய வீதம் 96 வீதமாக உள்ளது.

இந்த நிலைமை பார்க்கின்ற போது மாகாணங்களின் வரிசையில் கிழக்கு மாகாணம் 8வது இடத்தில் இருக்கின்றோம்.

சில காலங்களில் ஐந்தாவது இடத்தில் இருந்தோம் ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கீழ் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இது பற்றித்தான் நாங்கள் அதிகமாக விமர்சிக்கப்படுகின்றோம் கல்வியுடன் தொடர்பானவர்களும் தொடர்பில்லாதவர்களும் விமர்ச்சிக்க வேண்டும் என்ற என்னத்துடன் இருப்பவர்களும் அதிகம் அதிகம் கூறுகின்ற விடயம் இந்த விடயத்தைதான்.

கல்வி நிலையில் கிழக்கு மாகாணம் எட்டாவது இடத்தில் இருக்கின்ற நிலையில் இதனை நாங்கள் எவ்வாறு குறைத்து கல்வியில் முன்னணியில் வரலாம் என ஆராய்ந்த இந்த பெறுபேறுகளின் நிலைமைகளை அதிகரிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாங்கள் கல்வியில் முன்னேற வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் 30 தேசிய பாடசாலைகள் உள்ளன. அதில் மட்டக்களப்பு வின்கண்ட மகளிர் உயர்தர பாடசாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு மாகாணத்திற்கு சிறப்புக்களை ஈட்டித்தருகின்ற ஒரு பாடசாலையாக மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றது.

197 வருடங்கள் வரலாற்றினை இப்பாடசாலை கடந்து செல்கின்றது. சிறப்பாக இந்த பாடசாலையை வழி நடாத்திய இதன் அதிபர் ஓய்வு பெற்று செல்லவுள்ள நிலையில் இதற்கான புதிய அதிபரையும் தெரிவு செய்ய வேண்டிய பொறுப்புள்ளது என மேலும் தெரிவித்தார்..