மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் நினைவேந்தல் நிகழ்வு

0
757

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(21) வியாழக்கிழமை புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நடைபெற்றது.

1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் திகதி புதுக்குடியிருப்பில் 17 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் ஆத்மா சாந்திவேண்டி இந்நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.