முனைப்புநிறுவனம் நடாத்தும் கதம்பமாலை 2017.

இலங்கையின் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்து நாட்டில்  இயங்கும் முனைப்புநிறுவனம் வருடாந்தம் நடாத்தும் கதம்பமாலை 2017 நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24.09.2017 அன்று காலை 11.00 மணிமுதல் PFARREI ST.KARL,SPITALSTRASSE 93,6004 LUZERN ,SWITZERLAND எனும் விலாசத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வுக்கான அனுமதி இலவசம் எனவும் முனைப்பு நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். நாட்டில் பல்வேறு  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு  தலைமை தாங்கும் பெண்களுக்கான  சுயதொழில்திட்டம் ,அங்கவீனர்களை சமுகத்துடன் இணைத்தல்,பல்கலைக்கழகமாணவர்களுக்கான மாதாந்த  கொடுப்பனவு, வறுமைக்கோட்டின் கீழ் வாழும்  இடைநிலை மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு, அனர்த்ததின் போது  உதவுதல்,மருத்துவ உதவிபோன்ற பல்வேறுதிட்டங்களை முனைப்புநிறுவனத்தினர் நாட்டில் நடைமுறைப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்