பிறந்தநாள் பரிசாக கோரக்கோயில் இளம்விஞ்ஞானிக்கு 60ஆயிரம் ருபா உதவி

0
476
சகா)
சுவிற்சலாந்தில் வாழும் இலங்கைக்குழந்தையொன்றின் பிறந்தநாள் பரிசாக ‘அன்பேசிவம்’ அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கோரக்கோயில் கிராமத்தில் வாழும் வசதிகுறைந்த மணவர்களுக்கு கற்றலுபகரணங்களும் அங்குள்ள இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு 60ஆயிரம் நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளது.
சுவிஸில் வாழும் வரதராஜன் சுலோசனா தம்பதிகளின் செல்வப்புதல்வி வைஸ்ணவியின் 21வது பிறந்த தினத்தையொட்டி இலங்கையில் பின்தங்கிய கிராமத்தில்வாடும் குழந்தைகளுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
‘அன்பேசிவம்’ எனும் அமைப்பு இவ்ஏற்பாட்டைச் செய்திருந்தது. அமைப்பின் இணைப்பாளர் எஸ்.திருஞானசுந்தரம் இத்தகைய உதவிகளை இலங்கையில் குறிப்பாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் பின்தங்கிய பிரதேசங்களுக்கு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வமைப்பு கோரக்கோயில் கிராமத்தில் நிருமாணித்து அண்மையில் திறந்துவைத்த சிறுவர்பூங்காவுடன் இணைந்த மண்டபத்தில் இவ்வுதவிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கோரக்கோயில் கிராமத்தில் வாழும் சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு 60ஆயிரம் ருபா நிதியுதவி வழங்கப்பட்டது. வினோஜ்குமார் சிறுவயது முதல் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தேசியரீதியில் பல சாதனைகளை நிகழ்த்தி பலபரிசுகளை வென்றெடுத்தவர். கோரக்கோயில் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆரம்;பக்கல்வியைப்பயின்ற இவர் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தொழினுட்பத்தில் உயர்தரம் பயின்று தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.
அவர் மேலும் பல கண்டுபிடிப்புகளை நடாத்த ஊக்குவிப்பு நிதியை  அமைப்பின் அன்பேசிவம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி வழங்கிவைத்தார்.
இவ்வாறு புலம்பெயர்தேசங்களில் வாழும் எம்மவரின் குழந்தைகளின் பிறந்ததினக் கொண்டாடங்களை வெறும் ஊதாரித்தனமாக களியாட்டங்களில் வீணே செலவுசெய்யாமல் இவ்விதம் பயனுள்ளமுறையில் கொண்டாடுவது பெருவரவேற்புக்குரியது என்றும் இது முன்மாதிரியானதென்றும் இதனைப்பெற்று வழங்கும் அன்பேசிவமம் நிறுவனம் பாராட்டுக்குரியவர்கள் என்று இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் மற்றும் கிராமத்தவர்கள் நன்றியுடன் கூறுகின்றனர்.