மூன்றாம் தரம் புள்ளிகளை இழந்தால் வாகன அனுமதிபத்திரம் முற்றாக இரத்து செய்யப்படும்.

0
656
தற்காலத்தில் வாகன விபத்துக்கள் அதிகரித்தன் காரணமாக மோட்டார் வாகன திணைக்கத்தினால் இரண்டு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கபடவுள்ளது.   புள்ளியிடும் முறை மூலம் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தல். மூன்றாம் தரம் புள்ளிகளை இழந்தால் வாகன அனுமதிபத்திரம் முற்றாக இரத்து செய்யப்படும் என  மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ர மோட்டார் வாகன பரிசோதகர் ஏ.எல்.எம்.பாறுக் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து சட்டதிட்டங்கள் தொடர்பாக அறிவுறுத்தும் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்
நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுவது விபத்துக்களினாலாகும். விபத்து ஒன்று ஏற்பட்டால் அதில் பலதரப்பட்ட அதிகாரிகள் பலதரப்பட்ட வேலைப்பழுக்களுக்கும் மத்தியில்  பங்கேற்கவேண்டியுள்ளது இதில் எந்தவித அதிகாரிகளும் மிகவும் சந்தோசமாக இதில் பங்கேற்பதில்லை அதனை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
   இலங்கையில் யுத்தம் முடிவடைவதற்கு முதல் கிட்டத்தட்ட முப்பது இலட்சம்       வாகனங்களே இந்த நாட்டில் இருந்தது யுத்தம் முடிவடைந்த பிற்பாடு இந்த நாட்டில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை அறுபத்தியாறு இலட்சமாக உயர்வடைந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 500 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகையில் நான்கு பேருக்கு ஒன்று என்ற அடிப்படையில் வாகனம் காணப்படுகின்றது. வாகனம் செலுத்துவதற்குரியவர்கள் 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் சகலரையும் எடுத்துக் கொண்டால் மூன்று பேருக்கு ஒன்று என்ற அடிப்படையில் வாகனம் காணப்படுகின்றது. நான் நினைக்கவில்லை வேறு நாடுகளின் சனத்தொகைக்கேற்ப இவ்வளவு வாகனம் இருக்கும் என்பதனை.
    இலங்கையில்தான் இந்த போக்குவரத்துறை மிகவும் சவாலாக காணப்படுகின்றது. எனவேதான் அடிக்கடி இது சம்பந்தமான கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. எமது திணைக்களத்தின் சிரேஷ்ர அதிகாரி என்ற வகையில் அனைத்து கூட்டங்களிலும் நான் கலந்து கொண்டு எனது கருத்துக்களை முன்வைத்து வருகின்றேன்.
    இலங்கையினை பொறுத்தவரையில் அறுபத்தாறு இலட்சம் வாகனங்களில் 30 வீதமான வாகனம் முச்சக்கர வண்டியாக காணப்படுகின்றது. இதனை  நான்கு சக்கர வாகனமாக மற்றவேண்டும் என்பது எனது கருத்து. இதற்கான காரணம் என்னவென்பது உங்களுக்கு தெரியும். முச்சக்கர வண்டிகளாலேயே அதிகமான விபத்துக்கள் இடம் பெறுகின்றது. எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகளை நிறுத்துவதற்காகவே முற்கட்டமாக அதற்கான வரியை அரசாங்கம்  அதிகரித்துள்ளது. முச்சக்கர வண்டி இலங்கையில் ஒரு சவாலாக உள்ளது.
 தற்காலத்தில் வாகன விபத்துக்கள் அதிகரித்தன் காரணமாக மோட்டார் வாகன திணைக்கத்தினால் இரண்டு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு  இருக்கின்றோம். ஒன்று மோட்டார் வாகன போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு தண்டப்பணத்தை அதிகரித்தல். இதனால் விபத்துக்கள் குறைக்கப்படும் என அரசாங்கம் எதிபார்க்கின்றது. அண்மையில் தண்டப்பணம் கூட்டப்படவுள்ளதாக வந்த செய்தியின் பிற்பாடு 40 வீதமான விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளது இதனை பொலிஸ் ஒத்துக்கொண்டுள்ளது. அனைவருக்கும் போக்குவரத்துச் சட்டங்கள் தெரியும் தெரிந்தும் அதனை செய்வதற்கு முயற்சி செய்வதில்லை அதற்காகவே இத்தண்டாப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  இரண்டாவது நடவடிக்கை புள்ளியிடும் முறை மூலம் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தல். அதாவது தற்போது வழங்கப்பட்டுள்ள சாரதி அனுமதிப்பத்தரம் இலத்திரணியல் மயப்படுத்தப்பட்ட சிமாட் சாரதி அனுமதிபத்திரமாகும் இதில் அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்  ஒரு சாரதி அனுமதிபத்திரத்திற்கு   24 புள்ளிகள் வழங்கப்படும் மேற்கொள்ளப்படும் குற்றத்தின் அடிப்படையில் புள்ளிகள் வெட்டப்படும் 24 புள்ளிகளும் வெட்டப்படும் பட்சத்தில் சாரதி  அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு தடைசெய்யப்படும். பின்னர் மிண்டும் புள்ளிகளை அனுமதிப்பத்திரத்தில் மீள்நிரப்ப வேண்டுமாயின் ஒரு மாதம் கொழுபில் உள்ள சாரதி பயிற்சி பாடசாலையில் பயிற்சிநெறியை நிறைவு செய்து அதற்கான சான்றிதழை எம்மிடம் வழங்கும் பட்சத்தில் மீண்டும் 24 புள்ளிகள் மீள் நிரப்பி தரப்படும்
   மீள் நிரப்பப்பட்ட புள்ளிகளை இரண்டாம்முறை இழந்தால் மூன்றுமாத பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். மேற்கொண்ட பிற்பாடு அதற்கான சான்றிதழை எம்மிடம் வழங்கினால் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் 24 புள்ளிகள் மீள் நிரப்பி தருவோம். மூன்றாம் தரம் புள்ளிகளை இழந்தால் வாகன அனுமதிபத்திரம் முற்றாக இரத்து செய்யப்படும். உதாரணமாக இரண்டு தடவைகள் மஞ்சள் கொட்டில் முந்தி சென்றால் சாரதி அனுமதிப்பத்திரம் தடை செய்யப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
  இதுதான் வெளியாக இருக்கும் புதிய சட்ட நடவடிக்கையாகும் இதனை அமுல்படுத்துவதில் அரசியல் இழுபறி நிலை காணப்படுகின்றது. இவ்விரண்டு சட்டங்களையும் அமுல்படுத்துவதன் மூலம் விபத்துக்களை மிகவிரைவாக குறைக்கமுடியும். இதுவே வெளிநாடுகளில் உள்ள முறையாகும். இதில் இருந்து எவரும் தப்பமுடியாது எனவே அன்பாரந்த வாகன சாரதிகளே நீங்கள் இன்றில் இருந்து புதிய சாரதியாக மாறுங்கள் உங்களது உயிரையும் பிறரது உயிரையும் பாதுகாத்துக் கொள்பவர்காள மாறவேண்டும் என இதன் போது தெரிவித்தார்.