மியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்று கூடலில் கையொப்பம்

0
737

மியன்மார் ரோஹிங்காயவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பில் மனிதாபத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் படுகொலைகளுக்காக மியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை கோரி கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் 4.9.2017 திங்கட்கிழமையிரவு கையொப்பமிட்டனர்..

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடலின் போது இந்த கையொப்பங்கள் இடப் பெற்றன.

மியன்மார் ரோஹிங்காயவில் முஸ்லிம்கள் படுகொலை செய்வதை நிறுத்துவதற்கு மியன்மாருக்கு அழுத்தம் கொடுக்குமாறும் அந்த மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனிதாபத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் படுகொலைகளுக்காக மியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை கோரி கிழக்கு மாகாணத்திலுள்ள  ஊடகவியலாளர்கள் பலரும் இதில் கையொப்பமிட்டனர்.

இந்த கையொப்பங்கள் அடங்கிய பதாதையை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதி நிதிகளிடம் காத்தான்குடி மீடியா போரம் ஓரிரு தினங்களில் கையளிக்கவுள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.