A/L வினாத்தாள் விவகாரம்; கைதான மாணவனுக்கு விளக்கமறியல்

கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாள் வினாக்களை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய உயர்தர மாணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோருக்கு இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (23) கம்பஹா நீதவான் டி.ஏ. ருவன் பத்திரண முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோது நீதவானினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.
சந்தேக நபரான மாணவர் கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயில்பவர் எனவும் அவரது தந்தை நாராஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் வைத்தியராக கடமை புரிகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (19) இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையின் இரசாயனவியல் படத்தில் இடம்பெற்ற வினாக்களுக்கு ஒப்பான வினாக்களை உள்ளடக்கிய துண்டு பிரசுரம் ஒன்று கம்பகா பிரதேசத்தில் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த துண்டு பிரசுரம் பரீட்சை இடம்பெற்ற வேளையில் அச்சிடப்பட்டிருந்தது. மாணவர் ஒருவர் நான் பரீட்சையில் இடம் பெறும் வேளையில் தொழில்நுட்ப கருவிகள் மூலம் இவ்வினாக்கள் வெளியிடப்பட்டிருந்த பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரின் தந்தையும் அவ்வாசிரியரின் சகோதரர் ஒருவரும் அதனை அச்சிட்ட நபரொருவரும் பொலிசாரால் கைது கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை சந்தேக நபரான குறித்த பகுதி நேர வகுப்புகளை வழங்கும் ஆசிரியர் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் மேற்கொண்ட அழைப்பு விபரங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.