சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு ஸ்ரீலங்கா இராணுவம் ஆறு மாத கால அவகாசத்தைக் கோரியுள்ள போதிலும் கிராம மக்கள் அதனை நிராகரித்துள்ளனர்.
கேப்பாபுலவில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இன்றைய தினம் கொம்பிலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே கேப்பாப்புலவு கிராம மக்கள் தமது இந்த நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் அழைப்பின் பேரில் இன்றைய தினம் கொழும்பிலுள்ள அவரது அமைச்சில் கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது
இந்தக் கலந்துரையாடலுக்கு ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியின் பிரதிநிதியொருவரும் முல்லைத்தீவு இராணுவக் கட்டளைத் தளபதி உட்பட படை அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஆகியோருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண மீள்குடியேற்ற அமைச்சர் ஆனந்தி சசிதரன் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் , ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, திறைசேரி அதிகாரி முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது கேப்பாபுலவு காணிகளில் முதல் கட்டமாக 243 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டாவது கட்டமாக 5 மில்லியன் ரூபா நிதி இராணுவத்துக்கு வழங்கப்பட்டு 179 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது
3 வது கட்டமாக 148 மில்லியன் ரூபா நிதி இராணுவம் கோரியுள்ளது 111 ஏக்கரை காணியை விடுவிப்பதற்கு இதனடிப்படையில் இந்த நிதியை நான் விரைவாக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் காசு கொடுத்து காணியை விடுவிப்பதற்கு இராணுவம் 6 மாதம் கோரியுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்தார்
இதனைவிட மீதமாக உள்ள 70 ஏக்கர் காணி விடுவிக்க இராணுவம் எந்தவித தீர்வுகளும் வழங்காது அதனை விடுவிக்க முடியாது என்றவகையில் கருத்து தெரிவித்தது
இதனைதொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள் இவைகள் விடுவிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்கள் எல்லாவற்றையும் தெரிவித்து இராணுவம் மிகவிரைவில் இந்த காணிகள் விடுவிக்க வேண்டுமெனவும் நீண்ட கால அவகாசம் வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்இ
தனைவிட வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிதிகளாக கலந்துகொண்ட அமைச்சர் ஆனந்து சசிதரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் மக்கள் உள்ளிட்டவர்களும் தமது பல்வேறு எதிர்ப்புக்களை தெரிவித்ததோடு மீள்குடியேற்ற அமைச்சர் அவர்களும் இராணுவம் கோரும் கால அவகாசம் அதிகம் எனவும் விரைவாக தான் நிதியை வழங்குவதாகவும் மக்களுக்கு மிக விரைவில் காணிகள் வழங்க வேண்டுமெனவும் கோரினார்
மக்கள் ஆகக் கூடியது ஒருமாத காலத்தில் காணி விடுவிக்குமாறு கோரினர் இருப்பினும் இராணுவத்தரப்பு சரியான குறைந்த கால எல்லை வழங்கவில்லை இந்நிலையில்இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கும் போராட்டம் இன்று 150 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தமக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் விடுவிக்கப்படும் வரை தமது நில மீட்புப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் கேப்பாபுலவு மக்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.