பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சால், 27 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள், இன்று வழங்கப்பட்டுள்ளன. கணித, விஞ்ஞான, தொழிநுட்ப பாடங்களுக்கான ஆசிரியர்களாகவே, குறித்த பட்டதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலகத்தில் வைத்து, பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

குறித்த நியமனத்தின் அடிப்படையில், ஆசிரியர்கள் தமது கடமைகளை, நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளனர்.