முல்லைத்தீவு மாவட்டத்தில் பேருந்து தரிப்பிடம் அமைக்க வருகிற வருடத்திலேயே நிதி பெறக்கூடியதாக அமையும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பேருந்து தரிப்பிடம் அமைக்க வருகிற  வருடத்திலேயே நிதி பெறக்கூடியதாக அமையும் என நம்புவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையிலே இதுவரையில்  வஸ் தரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படாத நிலை காணப்படுகிறது இப்போதுதான் வஸ் தரிப்பு நிலையத்துக்கான இடம் தெரிவு செய்யப்பட்டு அந்த நிலம்  செப்பனிடப்பட்டு வருகிறது

இதன் பின்னர் தான் அதற்குரிய நிதியை பெறுவதற்குரிய ஒழுங்குகளை மேற்க்கொள்ளவேண்டிவரும் தேசிய போக்குவரத்து அதிகாரசபை ஊடாக தான் இந்த வேண்டுகோளை விடுக்கவேண்டியுள்ளது அதன் மூலமாக அடுத்த வருடம் இதற்க்கான நிதியை பெறக்கூடியதாக இருக்குமென நம்புகிறேன் என்றார்.