(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து சட்டவிரோத முறையில் மண்ணேற்றிய குற்றாச்சாட்டின் கீழ் இரு டிப்பர் வாகனங்களும் அதன் சாரதிகளும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(26) நள்ளிரவு கடுக்காமுனைப் பகுதியில் வைத்து ஒரு டிப்பர் வாகனமும், இன்று(27) காலை மணற்பிட்டியில் வைத்து இன்னொரு டிப்பருமாக இரு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொக்கட்டிச்சோலை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து வாகனத்தை கைப்பற்றியதுடன், சாரதிகளையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான, நடவடிக்கைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்தனர்.