வெருகல் பிரதேசத்தில் சிறுவர் நலன் தொடர்பாக கூடிய அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

வெருகல் பிரதேச செயலக பிரிவில் சிறுவர் பாதுகாப்பு செயற்பாடுகளினை மேம்படுத்தும் வகையில் சிறுவர் பாதுகாப்பு செயலகம் திறந்து வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரனால்  திறந்து வைக்கப்பட்டது.
இக் கட்டிடத்தின் திறந்து வைத்து  உரையாற்றிய பரதேச செயலாளர்,
வெருகல் பிரதேசத்தில் சிறுவர் நலன் தொடர்பாக கூடிய அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாடசாலை இடைவிலகி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்,  போசாக்கின்மை காரணமாக கல்வி மற்றும் சுகாதார விடயங்களில் சீர்கேடுகள், சட்ட விரோத மது உற்பத்தி மற்றும்  பாவனையினால் சீர்குலையும் சிறுவர் கல்வி மற்றும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோயகங்கள் என பலவேறு பட்ட விடயங்களிலிருந்தும் சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது..
வறுமை சிறுவர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடும் முக்கிய காரணியாகின்றது.  சிறுவர் பாடசாலை செல்வதை விடவும் கூலித் தொழில் செய்வதுதான் அவசியம் என பல பெற்றோர்கள் செயற்படுகின்றனர், இவ்வாறானவர்கள் தமது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இங்கு  உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலய வைத்திய அதிகாரி சிறுவர் மற்றும் கற்பிணித் தாய்மார் மத்தியில் மந்த போசாக்கு 43 வீதத்திற்கும் அதிகரித்து காணப்படுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார். சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் , சிறுவர் நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொலீஸ் உத்தியோகத்தர்கள் இச் செயலகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் எனவும் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.
இக்கட்டிடத்தில் சிறுவர் உரிமை மீறல்கள்,  சிறுவர் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான விடயங்கள் உலக தரிசன நிறுவனத்தினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், தளபாட வசதிகளையும் வழங்கியமைக்கும் பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வில், வைத்திய அதிகாரிகள்,  பொலிசார், கிராம சேவையாளர்கள்,  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், உலக தரிசன நிறுவன உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .