கல்முனை இளைஞர்களின் தயாரிப்பில் உருவான ”தேவதை Returns” குறும்படம், கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக வெளியீட்டு வைக்கப்படவுள்ளது..
கருத்தாழமிக்க பல குறும்படங்களை தாயரித்து விருதுகளையும் பெற்ற ஜோயல் J.R இன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வு, எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறும்.
திரு. சபா. சபேசன் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு. வீ.தவராஜா கலந்து கொண்டு வெளியீட்டு வைக்க, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திரு.முரளீஸ்வரன் பெற்றுக்ககொள்வார்.
குறும்படத்தின் விமர்சன உரையை எழுத்தாளர் உமாவரதராஜன் அவர்களும், வெளியீட்டு உரையை அதிபர் திரு. ஜெ.டேவிட் அவர்களும், நிகழ்த்துவர். அத்துடன் வரவேற்புரை ஓய்வு பெற்ற அதிபர் திரு. சந்தரலிங்கம் அவர்களும், நன்றியுரையினை திரு. சௌமியதாசன் அவர்களும் நிகழ்த்துவர்.