கிழக்கு மாகாணத்திற்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அலுவலகத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
யுனிசப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கல்லடி டச்பார் வீதியில் அமையப்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்க்கான புதிய காரியாலயம் இளைஞர் விவகார இராஜங்க அமைச்சர் கெளரவ நிரோசன் பெரேரா அவர்களினால் நேற்று சுபநேரத்தில் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் காலீத்தின் ஹமீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பின்வரும் கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.
* புதிதாக திறந்து. வைக்கப்பட்ட கட்டிமானது எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு உடனடியாக அடுத்தகட்ட கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
*.புதிய பாடத்திட்டத்துடன் கூடிய பயிற்சி நெறிகளை ஆரம்பிக்க வேண்டும்.
இந்த திறப்புவிழா நிகழ்வில் அரசியல் பிரமுகர்களுடன் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவல நிருவாக பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் கிழக்கு மாகாண பணிப்பாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர், நிருவாக உத்தியோகஸ்தர், திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.