மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுஞ்சேனை கிராமத்திலுள்ள குடிசை ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சேனையைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான காளிக்குடி பொன்னுத்துரை(68) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி கருத்து தெரிவிக்கையில்,
தானும் கணவரும் ஒன்றாக வசித்து வந்ததாகவும், நேற்று இரவு அருகிலுள்ள மகளின் வீட்டிற்கு தான் சென்று விட்டு வீ்டு திரும்புகையில் தனது கணவன் உயிரிழந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மரணவிசாரணைகளை திடிர் மரணவிசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் மேற்கொண்டார்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.