(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, கல்லடி பாலத்தின் ஆற்றில் மாணவன் ஒருவன் இன்று(07) தற்கொலை செய்ய குதித்துள்ளதாக கூறி, குறித்த மாணவனை தேடும் பணிகள் ஆரம்பித்துள்ளன.
கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பிரிவின் கணிதப்பிரிவில் கல்வி பயின்றுவரும் கருணாகரன் பானுஜன் என்றே மாணவனே ஆற்றில் குதித்துள்ளதாக தெரியவருகின்றது.
அம்பிலாந்துறை கிராமத்தினைச் சேர்ந்த இம்மாணவன், சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி கற்பதற்காக அப்பகுதியில் உள்ள உறவினரின் வீடொன்றில் தங்கியிருந்துள்ளார்.
பாடசாலைக்கு செல்வதாக தமது உறவினர்களிடம் இன்று(07) காலை கூறிவிட்டு, துவிச்சக்கரவண்டியில் வருகைதந்த மாணவனே இவ்வாறு ஆற்றில் குதித்துள்ளார்.
மாணவன் செலுத்தி வருகைதந்த துவிச்சக்கரவண்டி கல்லடிபாலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவனை தேடும் பணியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ள போதும் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் தேடுதலையும் மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.