கடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று(05.06.2017) தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 12ம் திகதி திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இந்த உற்சவத்தின் முன் நிகழ்வான தீர்த்தமெடுக்கும் நிகழ்வு இன்று(05.06.2017) தீத்தக்கரையிலே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சிறப்புற  இடம்பெற்றது. தீர்த்தம் எடுக்கப்பட்டு காட்டு விநாயகர் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விளக்கேற்றப்படும்.

தொடர்ந்து திங்கட்கிழமை (1 2 ) அதிகாலை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டமெடுக்கப்பட்டு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அடையும். அங்கு பொங்கல் உற்சவம்சிறப்புற இடம்பெறும்