வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசித்திங்கள் திருக்குளிர்த்திச்சடங்கு பெருவிழா இன்று 5ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன் ஆரம்பமாகின்றது.
இச்சடங்குப்பெருவிழா தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும் என ஆலயபரிபாலனசபையினர் தெரிவித்தனர்.
06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.தொடர்ந்து புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.
12ஆம் திகதி திஙகட்கிழமை பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவம் நடைபெறும்.மறுநாள் செவ்வாய அதிகாலை குளிர்த்தி பாடப்பெறும்.
எட்டாம்சடங்கு 19ஆம் திகதி மாலை 7மணிக்கு இடம்பெறும் என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.