நாட்டில் பெய்து வரும் அடைமழையின் காரணமாக மக்களின் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..
வீரகெட்டிய, நெலுவ, மொரவக்க, தியந்தர, பாதுக்க, புலத்சிங்கள,களவான, வெல்லம்பிட்டி, பளிந்தனுவர மற்றும் பெலியத்த ஆகிய பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசதங்களின் மீட்பு பணிகளில் 300 இராணுவ வீரர்களுடன் இணைந்து 13 கடற்படை குழுக்கள் மற்றும் விமானப்படை குழுக்கள் ஆகியன குறித்த மாவட்டங்களின் இடர்முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழையினால் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை வீழ்ச்சி காரணமாக களு கங்கை, களனி, நிள்வலா மற்றும் அத்தனகல ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டங்கள் உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அவசர அழைப்பு – இடர்முகாமைத்துவ நிலையம்
அவசர அழைப்புக்கு – 117
பொது : 0 11 2136136
ஏனைய : 0 11 2136222 / 0 11 2670002
தொலை நகல் : 0 11 2670079
தொடர்பு இலக்கங்கள் – மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட செயலாளர்கள்
இரத்தினபுரி மாவட்டம் – 0452222235 / 0714423760
களுத்துறை மாவட்டம் – 034 2222235 / 0716814813
காலி மாவட்டம் – 0912234235 / 0714415377
மாத்தறை மாவட்டம் – 0412222235 / 0776864397
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 0472256235 / 0714441612
கொழும்பு மாவட்டம் – 0112369134 / 0773184910
கம்பஹா மாவட்டம் – 0332222235 / 0773273507
கேகாலை மாவட்டம் – 0352222235 / 0773633293
News.lk