உலகறிந்த கவிஞர் ”சண்முகம் சிவலிங்கம்” அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவாக ”நினைவின் நிழலில்” நிகழ்வு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் 07.04.2017 நடைபெற்றது.
எழுத்தாளரும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஆலோசகருமான உமாவரதராஜன் தலைமையில் கல்முனை பாத்திமா தேசிய பாடசாலை கிளனி மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் தொடர்பாக பேராசிரியர் சி .மௌனகுரு அவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு அரங்கு ஆய்வு கூடம் வழங்கிய ‘அப்பா ‘ கவி நாடகம் மேடையேற்றப்பட்டதுடன், நினைவு சிறப்புரையை கவிஞரும் விரிவுரையாளருமான சோ .பத்மநாதன் வழங்கினார். அத்துடன் ர .ஜோயல் குழுவினரால் கவிஞரின் சில கவிதைகள் உள்ளடங்கிய ஒளித் தொகுப்பான ‘வரிகளும் வடிவமும் ‘ திரையிடப்பட்டது.
கல்முனை தமிழ் சங்கத் தலைவர் பரதன் கந்தசாமி அவர்கள் வரவேற்புரையும், கல்முனைநெற் ஊடக குழுவின் இயக்குனர் கோ.பிரசாந் நன்றியுரையையும், நிகழ்ச்சி தொகுப்பை க. டினீஸ்கரனும் வழங்கினர்.
இன்றைய நிகழ்வில் பேராசிரியர் மௌனகுரு அவர்களுக்கும், விரிவுரையாளர் சோ. பத்மநாதன் அவர்களுக்கும், ர. ஜோயல் ஆகியோருக்கும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அரங்கு ஆய்வு கூடம் குழுவினரும் கௌரவிக்கப்ட்டனர். இந் நிகழ்வில் எழுத்தாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்..
பு. கேதீஸ்