சர்வதேச ஊடகவியலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் யாழ் ஊடக அமையத்தினால் நேற்று(03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ் பிரதான வீதியில் அமைந்திருக்கும் ஊடகவியலாளர்களின் பொதுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் யாழ் பேரூந்து நிலையத்தில் ஊடகவியலாளர்களினால் ஊடக அடக்கு முறைக்கு எதிராகவும்,கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும்,கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை கண்டுபிடிக்கக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.