கல்குடா கல்வி வலயத்திற்கான பணிப்பாளர் கடமைக்கு தினகரன் ரவி நியமனம்

0
2294

ravi-aகல்குடா வலயக் கல்விப் பணிப்பாளருக்கான பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபார்சின்பேரில் தற்காலிக வலயக் கல்விப் பணிப்பாளராக வலயத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தரான பிரதி கல்விப் பணிப்பாளர் (இலங்கை கல்வி நிருவாக சேவைவகுப்பு – ) சந்திவெளியைச் சேர்ந்த தினகரன் ரவி இன்று (3) புதன்கிழமை நியமிக்கப்பட்டு பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டது..

முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா ஏப்ரல் 29ம் திகதி ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து வலயத்திற்கான வெற்றிடம் காணப்பட்ட நிலையில் குறித்த சிபார்சை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வழங்கியுள்ளார்.

கல்குடா கல்வி வலயத்திற்கான வலயக் கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சைகளும் இடம்பெற்று முடிந்த நிலையில் எதிர்வரும் மாதங்களில் வலயத்திற்கான வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் வழங்கப்படயிருப்பதாக தெரிவித்தனர்.

வலயத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தரான பிரதி கல்விப் பணிப்பாளர் (இலங்கை கல்வி நிருவாக சேவைவகுப்பு -) தினகரன் ரவி வலயத்திலுள்ள பாடசாலை மட்டங்களில் பெரும் மதிப்பும் சேவை மனப்பாங்கும் கொண்டதுடன் வலயத்தில் கல்வி சமூகத்தை முன்னேற்றும் உயரிய சிந்தனையும் நற்பண்பும் கொண்டவராக அனைவராலும் பாராட்டப்பட்டுள்ள அதேவேளை ஆசிரியராக, அதிபராக, சமூக சேவையாளராக கடந்த காலங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த காலத்தில் சித்தாண்டி வந்தாறுமூலை பாடசாலையை தான் அதிபராக கடமையேற்று ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இடம்பெற்றதான கல்வி வளர்ச்சிக்குத் தேவையான பங்களிப்பை அயராது மேற்கொண்டதன் காரணமான வரலாறு காணாத எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பல்கலைகழக அனுமதி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.