கிழக்கில் தமிழரின் பலம் குறைந்ததனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்புத் தீர்மானம் வந்தது

senathi-a“கிழக்கு மாகா­ணத்­தில் தமி­ழ­ரின் பலம் குறை­வாக இருக்­கின்­றது. இத­னால் கிழக்கு மாகா­ணத்­துக்கு துணை­யாக வடக்கு மாகாண மக்­க­ளின் பலம் கொடுக்­கப்­படவேண்­டும் என்­பதை அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்டே, வடக்கு – கிழக்கு இணைப்பை வலி­யு­றுத்­திய தீர்­மா­னம் 1949ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்­டது”
இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.
தந்தை செல்வா நினைவு நிகழ்வு மட்­டக்­க­ளப்­பில் நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
1961ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் சத்­தி­யாக்­கி­ரத்­தில் நானும் மாண­வ­னாக இருந்தபோது பங்­கு­பற்­றி­யி­ருந்­தேன். அந்­தக் காலத்­தில் இடம் பெற்ற சம்­ப­வங்­களை நினைத்­துப் பார்க்­கின்­றேன். கிழக்கு மாகா­ணத்­தின் பல பிர­தே­சங் க­ளில் முஸ்­லிம் பெண்­கள் போராட்­டத்­தில் பங்­கேற்­றுக் கொண்­டமை இன்­னும் கண்­முன்னே இருக்­கின்­றது.
அந்­தக் காலத்­தி­லி­ருந்தே தமி­ழர் தாய­கத்­தில் முஸ்­லிம்­க­ளுக்­கும் பங்கு உள்­ளதை தந்­தை­செல்வா கூறி­யி­ருந்­தார். இந்த தமி­ழர் தாய­கப் பிர­தே­சம் முஸ்­லிம் மக்­க­ளுக்­கும் சொந்­த­மா­னது என்­ப­தையும் அவர் கூறி­யி­ருக்­கின்­றார். மறைந்த தலை­வர் அஷ்ரப்கூட தமி­ழர் விடு­தலை கூட்­டணி ஊடா­கவே அர­சி­ய­லுக்­குள் பிர­வே­சித்­தி­ருந்­தார். அவர் இறக்­கும் வரை எங்­க­ளுக்­கும் அவ­ருக்­கும் எந்­த­வித முரண்­பா­டு­க­ளும் ஏற்­பட்­ட­தில்லை.
வடக்கு -– கிழக்கு மாகா­ணம் ஏன் இணைந்­தி­ருக்க வேண்­டும் என்­பதை 1949ஆம் ஆண்டு தந்தை செல்வா மிக­வும் தெளி­வாக சுட்­டி­க் காட்­டி­யிருக்­கின்­றார். யாழ்ப்­பா­ணம் தமி­ழர்­களை நிறை­வாகக் கொண்ட பிர­தே­சம். ஆனால் கிழக்கு மாகா­ணத்­தில் அவ்­வா­றில்லை. பல இனத்­த­வர்­கள் வாழ்­கின்­ற­னர். இங்கு தமி­ழ­ரின் பலம் குறை­வாக இருக்­கின்­றது. கிழக்கு மாகா­ணத்­தின் பலத்­துக்கு துணை­யாக வடக்கு மாகாண மக்­க­ளின் பலம் கொடுக்­கப்­பட வேண்­டும் என்­பதை அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்­ட­மை­யால் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது – என்­றார்.