சமூகப் பணியினுடைய இடையீட்டு மட்டங்கள்(levels of intervention in social work)

தொழில்வான்மை சமூகப் பணி என்பது கல்வியினையும், பயிற்சியினையும் அடிப்படையாகக் கொண்ட பரீட்சயமாகும். இது சமூக மாற்றம், அபிவிருத்தி, நல்லிணக்கம், சமூக வலுவூட்டல் மற்றும் சமூக விடுதலையினை ஊக்குவிக்கிறது. சமூகப் பணியினுடைய மையங்களாக சமூக நீதிக்கான மூல தர்மங்கள், மனித உரிமை மற்றும் கூட்டினைந்த பொறுப்பு போன்றவற்றை குறிப்பிடலாம். இது சமூகப்பணி சமூக விஞ்ஞானங்கள் மற்றும் ஏனைய சமூக விஞ்ஞானங்களின் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளதோடு பாரம்பரிய அறிவுகளுக்கும் மதிப்பளிக்கிறது. சுருக்கமாக குறிப்பிடுவதாயின், மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கான முறைகளை வசதி படுத்திக் கொடுக்கிறது. (IAASW- 2014)

சமூகப் பணி இடையீடுகள் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்கு உதவி தேவைப்படும் தனிநபர்கள், குழுக்கள் அல்லது சமூகங்களுடன் தீவிரமாக ஈடுபடும் சமூகப் பணியாளர்களை உள்ளடக்கியதாகும். அந்த வகையில் சமூகப் பணியில் இடையீட்டு மட்டங்கள் என்பது சமூகப் பணியாளர்கள் அவர்களது சேவைகளை வழங்கும்போது ஒவ்வொரு நிலைகளினூடாக இடையீடு செய்வதை குறிக்கின்றது. அதாவது எவ்வாறு மாறுபட்ட நிலைகளில் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறார்கள் என்பதே ஆகும். இதில் உளவியல் சிகிச்சை, பரிந்து பேசுதல், நடுநிலை வகுத்தல், சமூகத் திட்டமிடல் மற்றும் சமுதாய ஒழுங்குபடுத்தல் போன்றவைகள் இடம்பெறுகின்றன.

இடையீட்டு மட்டம் தொடர்பில் ஹிமில்ட் கார்டன்(1956) எனும் அறிஞர், “இடையூறு அல்லது சிகிச்சை என்பது சேவை நாடிக்கு தேவையான சேவைகளை அமைத்துக் கொடுத்தல் அல்லது சேவை நாடினுடைய நடத்தையினை மற்றவர்களுக்கு பொருத்தமான முறையில் மாற்றி அமைத்தல் “எனக் குறிப்பிட்டார். இடையீட்டு செயன்முறை மட்டங்களை பின்வருமாறு மூன்று பிரிவுகளாக பிரித்து நோக்கலாம்.

1. நுண் மட்டம்/ முதன்மை மட்டம் (Micro level)
இது குறிப்பிட்ட சிறிய அளவிலான தரப்பினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை குறிக்கிறது. அதாவது, தனிப்பட்ட நபர் அல்லது குடும்பம் போன்ற சிறிய மட்டங்களின் சிக்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்வதேயாகும். இப் பிரச்சனைகளை தீர்க்க உதவுபவரே நுண்மட்ட சமூகப்பணியாளர் என அழைக்கப்படுகிறார். நுண்ணிய நடைமுறையில் இராணுவ சமூகப் பணிகளும் அடங்கும். நுண்ணிய சமூக பணியாளரே இராணுவ சேவை உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய இராணுவ வாழ்க்கையுடன் வரும் சவால்களை சமாளிக்க உதவுகிறார். மற்றும் அவர்களின் சேவையின் மூலம் அவர்களுக்கு உரிமை உள்ள நன்மைகளை அனுப்புகிறார். இம்மட்டத்தில் ஒரு சமூக சேவையாளரும் ஒரு வாடிக்கையாளருக்கும் இடையிலான உரையாடல்கள் இடம் பெறுகின்றன. இது பற்றி மேரி ரீச்சி எனும் அறிஞர் “தனிநபர் குடும்பம் சமூகம் என்ன பல்வேறு மட்டங்களில் சமூகப் பணி இடம்பெறுவதாக குறிப்பிட்டார்”.
உதாரணமாக:- உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள ஒருவருக்கு அவரை அதிலிருந்து வெளியே கொண்டு வர ஆலோசனைகள் அல்லது சேவைகளை வழங்குதல் .
ஒரு வரிய குடும்பத்துக்கு நிதி உதவி அரசு நல திட்டங்களைப் பெற உதவி செய்தல்.

2. இடை மட்டம் (Mezzo level)
இடை மட்டம் என்பது சுற்றுப்புறங்கள், நிறுவனங்கள், அயலவர்கள் போன்ற சிறிய குழுக்களை உள்ளடக்கிய இடைநிலை அளவில் இடம்பெறுகிறது. மேலும் இது பிற உள்ளூர் நிறுவனங்களிலும் ஏற்படுவதோடு சமூகத்தின் ஒழுங்கமைத்தல் ,சமூகப் பணி அமைப்பின் மேலாண்மை, அல்லது தனிப்பட்ட வாடிக்கையாளர்களை காட்டிலும் நிறுவன அல்லது கலாச்சார மாற்றத்திற்கு கவனம் செலுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியது.
உதாரணமாக:-
1.ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள மிகவும் வறுமைப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களது அடிப்படைத் தேவைகளை அக்கிராம சங்கங்களின் மூலம் பெற்றுக்கொள்ள வசதிபடுத்தி கொடுப்பதாகும்.
2. ஒரு சமூக அமைப்பின் பகுதியாக ஒரு நகரில் உள்ள விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் பயிற்சி மற்றும் கோரிக்கை இயக்கங்கள்.
Mezzo நடைமுறையில் ஈடுபடும் சமூக சேவகர்கள் பெரும்பாலும் மைக்ரோ சமூக பணிகளிலும் ஈடுபடுகின்றனர். சமூகப் பணிக்குழுவுடன் பணியாற்ற சமூக பணியாளர்களின் வகிபங்கு குறைவாக தேவைப்படின் 5-6 பேர் வைத்து பணியாற்றலாம்.

3.பேரின மட்டம் /பெரும்பாகு மட்டம் (Macro level)
Macro சமூகப் பணி நடைமுறை என்பது பெரிய அமைப்புகளில் தலையிட்டு வாடிக்கையாளர்களுக்கு உதவும் முயற்சியாகும். அதாவது, அரசியல் சட்டங்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் மாற்றங்களை அடைய உதவுகிறது .

Macro பயிற்சி என்பது சமூகப் பணி மற்றும் மனநல சிகிச்சை போன்ற பிற உதவித்தொழில் ஒன்றாகும். Micro சமூகப் பணி பொதுவாக macro அல்லது micro சமூகப் பணி ஆராய்ச்சி ஆகியவற்றை குறிக்கிறது. Macro level பயிற்சி முறை சிக்கல்களில் கவனம் செலுத்துகிறது. ஒரு தொடர்ச்சியான கவனிப்பை நிறுவதற்க்காக சேவை வழங்குனரின் வலயமைப்பை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை இதில் அடங்கும். Macro level அளவிலான தலையீடு,1கொள்கை மாற்றங்களை உருவாக்குவதின் மற்றும் பரப்புரை செய்வதன் மூலம் அரசியல் சாம்ராஜ்யத்தை குறிக்கிடலாம்.

சமூகத் திட்டங்களை திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை Macro அளவிலான நடைமுறையை பயன்படுத்தக்கூடிய செயல்முறைகளாகும்.உதாரணமாக:- சமூக நிலத்திட்டம்- அரசாங்கம் கொண்டு வரும் புதிய தொழிலதிபர் தகுதிக்கான கொள்கைகள் அல்லது உத்தியோகபூர்வ திட்டங்கள் eg: அரசு வேளாண்மை உதவி திட்டம் (விவசாயிகளின் நலனை மேம்படுத்த)

பொதுக் கல்வி அல்லது மருத்துவ துறையில் மாற்றங்கள்:- அரசாங்கங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்தின் மேம்பாட்டுக்கான புதிய கொள்கைகள் உருவாக்குவது,- மாணவர்களுக்கு இலவச சுகாதார பரிசோதனை திட்டம்.

*சமூகப் பணி இடையீட்டு மட்டத்தின் நோக்கங்கள்*

1.தனி மனிதர்களின் பிரச்சினைகளை அவதானித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

2.குழுக்களினுடைய சமூகவியல் அமைப்புக்களை மேம்படுத்துகிறது.

3.சமூக அமைப்புகளை அதாவது அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை பெற்றுக் கொள்வது தொடர்பான விடயங்களை மேம்படுத்துகிறது.

4. சமூக நீதி மற்றும் சம தர்மத்தை உறுதி செய்ய பயன்படுகிறது.

5. சமூகத்திற்கான குறைந்த செலவுகளில் அதிக பயனுள்ள உதவிகளை வழங்குதல்.

சமூகப் பணியாளர்கள் தங்களுக்கு பொருத்தமான மட்டங்களில் தீர்வுகளை வழங்குகிறார்கள். தேவைகளையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு தங்களின் அறிவைக்கொண்டு அவற்றுக்கான தீர்வுகளை வசதி படுத்திக் கொடுக்க முயல்கின்றனர். இம்மூன்று மட்டங்களும் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்க பயன்படுகின்றன. Micro level தனிப்பட்ட நபர்களுக்கும் நேரடி உதவி வழங்கப்படுவதோடு, mezzo level இல் குழுக்கள், சமூக நலனை பராமரிப்பது மற்றும் Macro levelல் பெரும்பாலான சமூகப் பிரச்சினைகள் மற்றும் கொள்கைகளை மாற்றுவது தொடர்பான செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.

ABF.ஹன்னதுல் அப்fகா
-சம்மாந்துறை-

சமூகப் பணி இளங் கலைமானி சிறப்பு பட்டப்படிப்பு,
முதலாம் வருட மாணவி
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்- சீதுவை