*சமூகப்பணி என்பது*
தொழில்வாண்மையான சமூகப்பணியானது பயிற்சியினையும்,கல்வியினையும் அடிப்படையாக கொண்ட பரீட்சயமாகும்.இது சமூக மாற்றம்,அபிவிருத்தி, சமூகநல்லிணக்கம்,சமூகவலுவூட்டல் மற்றும் சமூக விடுதலையினை உக்குவிக்கின்றது.தனிநபர்கள், குழுக்கள் அல்லது சமூகங்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், சமூக நீதிக்கான போராட்டத்தில் பங்களிக்கவும் உதவும் ஒரு தொழில் ஆகும்.சமூகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை தீர்ப்பதற்கான வழிகளை தேடுவதையும் உள்ளடக்கியதாகும்.
*சமூக நலன்புரி என்பது*
ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே கட்டமைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினால் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு குறிப்பிட்ட நபருக்கு அல்லது குழுக்களுக்கோ வழங்கப்படும் சமூக சேவை அல்லது சமூக ஆதரிப்பு ஆகும். இதில் சுகாதாரம், கல்வி, வீட்டு வசதிகள், வேலைவாய்ப்பு, பொழுதுபோக்குகள் போன்றன உள்ளடக்கப் படலாம்.
*சமூக நலன்புரி எவ்வாறு சமூகப்பணியில் தாக்கம் செலுத்துகிறது*
சமூக நலன்புரி என்பது சமூகப்பணியின் அடிப்படைத் தூண்களில் ஒன்றாகும்.இது சமூகப்பணியாளர்களின் பணிக்கு வலுவான ஆதரவை வழங்கி சமூக மாற்றத்திற்கான வழியை வழங்குகிறது.
சமூக நலன்புரி எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதைப் பார்ப்போம்…..
:- சமூக நலன்புரி திட்டங்கள் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றன. இது சமூகப்பணியாளர்களுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.
:- சமூக நலன்புரி திட்டங்கள் சமூகப்பணியாளர்களுக்கு நிதி, வளங்கள் மற்றும் திட்டங்களை வழங்குகின்றன. இது சமூகப்பணியாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய உதவுகிறது.
:- சமூக நலன்புரி மற்றும் சமூகப்பணி இரண்டும் சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித நலன் போன்ற பொதுவான குறிக்கோள்களை பகிர்ந்து கொள்கின்றன. இது இரண்டு துறைகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கிறது.
இவ்வாறு சமூக நலன்புரியானது சமூகப்பணியில் தாக்கம் செலுத்துவதனை காணக்கூடியதாக உள்ளது.
*சமூகப்பணியில் சமூக நலன்புரியின் வகிபங்கு*
சமூக நலன்புரி என்பது சமூகப்பணியின் முக்கிய அங்கமாகும். இது சமூகப்பணியாளர்களுக்கு முக்கிய வகிபாட்டை வழங்குகிறது.
: *சமூக பிரச்சினைகளை அடையாளம் காணுதல்*
-சமூக நலன்புரி திட்டங்கள் மூலம் சமூகப்பணியாளர்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை எளிதாக அடையாளம் காண முடியும்.
: *தீர்வுகளை வழங்குதல்*
-அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க சமூக நலன்புரி திட்டங்கள் உதவுகின்றன.
*உதாரணமாக*- சமுர்த்தி,அஸ்வெசும, ஓய்வூதியத் திட்டங்கள்.
: *சமூக மாற்றத்தை ஏற்படுத்துதல்*
-செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் சமூகத்தில் நீடித்த மாற்றங்களை ஏற்படுத்த உதவுகின்றன.
*நடைமுறையில் உள்ள சமூக நலன்புரி திட்டங்கள் மற்றும் அவற்றின் நோக்கங்கள்*
இலங்கையில் பல்வேறு சமூகப் பிரிவினருக்கு உதவும் வகையில் பல சமூக நலன்புரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என பல தரப்பினருக்கும் பயனளிக்கின்றன.
: *சமுர்த்தி* – இது இலங்கையின் மிகப்பெரிய சமூகப்பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாகும். இது குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு நிதி உதவி, ஊட்டச்சத்து, மற்றும் பிற சேவைகளை வழங்குகின்றது.
: *முதியோர் கொடுப்பனவு*- 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஆகும்.
: *சுகாதார காப்பீட்டு திட்டங்கள்*-குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதார வசதிகள் வழங்கும் திட்டங்கள்.
: *இலவச கல்வி*-சிறுபான்மையினருக்கான கல்வி மற்றும் அவர்களின் கல்விக்கு தேவையான பொருளாதார மேம்பாடு மற்றும் நலன்புரி திட்டங்கள்.
*நலன்புரி திட்டங்களின் நோக்கங்களாக*
: குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்.
: சமூக பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
: குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்.
: முதியவர்களின் நலனைப் பேணுதல்.
: மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்.
*திட்டங்களின் நன்மைகள்*:
: ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.
: சமூக ஒற்றுமை அதிகரிக்கிறது.
: குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் பணி ஆகியவை குறைகின்றன.
: சுகாதாரம் மற்றும் கல்வி நிலை மேம்படுகிறது.
*திட்டங்களின் சவால்கள்*:
: பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நிதி பற்றாக்குறை.
: திட்டங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாதது.
:தகுதியான நபர்களும் திட்டங்களின் பயன்களைப் பெறுவது இல்லை.
*சமூக நலன்புரியின் இயல்புகள்*
: குறிப்பிட்ட நிபந்தனைகளை உள்ளடக்கியதாகும்.
: அனைவரும் அல்லது தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்குவதாகும்.
: கட்டமைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் சேவையாகும்.
: தொடர்ச்சியானதாகவோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுவதாகும்.
*சமூக நலன்புரி திட்டங்கள் சமூகப்பணியுடன் இணைக்கப்படும்போது, சமுதாயத்தில் பல்வேறு நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம்*
இவை சில:
*தனிநபர் மட்டத்தில்*:
* வாழ்க்கைத் தரம் மேம்பாடு: அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதால், மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
* உடல்நலம் மேம்பாடு: சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்கள் உடல்நலத்தை மேம்படுத்த உதவும்.
* கல்வி வாய்ப்புகள்: கல்வி திட்டங்கள் மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுவர்.
* தன்னம்பிக்கை அதிகரிப்பு: திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் தனிநபர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
*சமூக மட்டத்தில்*:
* வறுமை குறைப்பு: சமூக நலன்புரி திட்டங்கள் வறுமையைக் குறைக்க உதவும்.
* சமூக நீதி: அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும்.
* சமூக ஒற்றுமை: வெவ்வேறு சமூகக் குழுக்களுக்கு இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும்.
* சமூகப் பிரச்சினைகள் தீர்வு: குழந்தைத் திருமணம், குழந்தை தொழிலாளர், பாலின சமத்துவமின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும்.
*பொருளாதார மட்டத்தில்*:
* உற்பத்தித்திறன் அதிகரிப்பு: மனித வள மேம்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
* சமூக பொருளாதார வளர்ச்சி: சமூக நலன்புரி திட்டங்கள் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
*சமூகப்பணியாளர்களின் பங்கு*:
* திட்டங்களை செயல்படுத்துதல்: சமூக நலன்புரி திட்டங்களை திறமையாக செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
* பயனாளிகளை அடையாளம் காணுதல்: திட்டங்களின் பயனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகின்றனர்.
* பயனாளிகளுடன் தொடர்பு கொள்ளுதல்: பயனாளிகளுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, தகுந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
* சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: சமூக நலன்புரி திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இவ்வாறு சமூக நலன்புரியானது சமூகப்பணியில் பல்வேறு வழிகளில் சிறப்புப் பெறுகிறது.
சமூகப் பணி மற்றும் சமூக நலன்புரி இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை. சமூகப் பணி சமூக நலன்புரி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி , சமூக நீதியை நிலைநாட்ட உதவுகிறது. இதன் மூலம் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
*ஆஷிக் முகம்மது பாத்திமா ஹம்னா*
*சமூகப்பணி இளமாணி சிறப்புப் பட்டப்படிப்பு*
*1ஆம் வருட மாணவி*
*(2023/2024)*
*தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்*