எஸ்.எஸ்.அமிர்தகழியான்
பதிவாளர் நாயக திணைக்களத்தின் கிழக்கு வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பதிவாளர் நாயகமாக கடமையாற்றி வடக்கு வலயத்திற்கு பிரதிப் பதிவாளர் நாயகமாக செல்லவுள்ள பி.பிரபாகர் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் (17) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.பிரதி பதிவாளர் நாயகம் பி.பிரபாகரன் கடந்த ஒன்பது மாதங்களே கடமையாற்றியகாலத்தில் அளப்பெரிய சேவையினை கிழக்கு மாகாணத்திற்கு ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது அவருடைய வருகையின் பின்னர் சகல ஆவனங்களையும் கணனி மயமாக்கப்பட்டது அத்தோடு புதிய மாவட்ட செயலகத்திற்கு தங்களின் காணி பதிவகத்திணை புதிய பரினாமத்துடன் நிறுவிய பெருமைக்குரியவராக உரையாற்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளிதரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஶ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி), பிரதம கணக்காளர் திருமதி.ஆர்.காயத்திரி, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரீ.ஜெய்த்தனன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நே.விமல்ராஜ், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன், மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்ததுடன், பிரதிப் பதிவாளர் நாயகமாகம் பி.பிரபாகர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து தமது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



