க.ருத்திரன்
வாழைச்சேனை திருமலை வீதியில் நேற்று புதன் கிழமை (15) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கலைவாணி வீதி கறுவாக்கேணியைச் சேர்ந்த வி.வினோசித் வயது (36) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு மட்டக்களப்பில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை இவரை மோதியவர்கள் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இன்று (16) காலை மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.