இலங்கை நாட்டை இனவாதமற்ற நாடாக மாற்றும் முயற்சியின் ஆரம்பமாக தேசிய கீதத்தை தமிழில் பாட இடம் அளிக்கவும்

மதவாதம் அற்ற தேசிய ஒருமைப்பாடு கொண்ட நாடாக இலங்கை நாட்டை கட்டி அனுப்புவதில் உறுதி பூண்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேவேளை இந்த இனங்களுக்கு இடையில் நல்லுறவை பேணுவது ஆக்கபூர்வமான, உளபூர்வமான யதார்த்தமான நடவடிக்கையை அரசு முன்னெடுக்குமேயானால் நிச்சயம் அனைத்து இன மக்களும் பூரண ஆதரவு அளிப்பார்கள். அதேவேளை இந்த இலங்கை நாடும் சிங்கப்பூர் போன்று ஒரு நல்லிணக்க வாழ்வை காட்டும் உதாரணமான நாடாக நிச்சயம் உலகிற்கு அமையும் என்பதில் ஐயமில்லை.

அதே வேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் அனுமதிக்கப்பட்டது. தமிழில் விருப்பம் காட்டவில்லை பாடுவதற்கு அவர்கள் விதித்திருந்தார்கள். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசின் போது இலங்கையின் சுதந்திர தின விழாவின் போது சிங்கள மொழிகளிலும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பெற்றது இதனை அனைத்து மக்களும் வரவேற்றார்கள்.

பின்னர் காலப்போக்கில் மைத்திரி அரசிலும் அந்த தமிழ் தேசிய கீதம் தொடராமல் கைவிடப்பட்டது. அதன் பின்னர் வந்த கோட்டபாய அரசும் ரணில் அரசும் தேசிய கீதம் சிங்கள மொழியிலேயே கொண்டு செல்லப்பட்டது. எனவே இது ஒரு ஆரம்ப கட்டமாக அனைத்து இன மக்களையும் ஒன்று சேர்க்கும் வண்ணம் ஒரு தாய் மக்களாக அந்த உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் பாடப்படுவது போன்று தமிழிலும் அரச நிகழ்வுகளில் பாடப் பெறுவதற்கு இந்த அனுர அரசு நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கூற்று நிச்சயமாக நிதர்சனமாக்குவதற்கு ஆரம்ப அத்திவாரமாக்குவதற்கு இது அமையும் என்பதில் ஐயமில்லை என சர்வதேச இந்து மதபீட செயலாளரும் முன்னாள் தேசிய நல்லிணக்க அமைச்சின் இணைப்பாளருமான பாபு சர்மா தெரிவித்துள்ளார்.