மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் 12000மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது.
அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் போது, 03 கொள்கலன்களில் இருந்த 12000 மில்லி லீட்டர் சட்டவிரோத கசிப்பு கைப்பற்றப்பட்டு, சந்தேக நபர்கள் யாரும் இன்மையால் குறித்த இடத்திலேயே அழிக்கப்பட்டுள்ளது.