வாழைச்சேனை சுகாதார பிரிவுக்குட்பட்ட உல்லாச விடுதிகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.பாமினி அச்சுதன் தலைமையில் பாசிக்குடா அனந்தையா ஹேட்டலில் சின்னமுத்து தடுப்பூசி மருந்து ஏற்ற தவரியவர்களுக்கு தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது.
இலங்கையில் சின்னமுத்து நோய் பரவுவதால் 20 -30 வயதுக்குட்பட்ட இளம் வயதைச் சேர்ந்தவர்களுக்கு சின்னமுத்து தடுப்பூசி வழங்கப்பட்டது.
காற்றினால் பரவக்கூடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது