கோறளைப்பற்று மத்தியில் மினி சூறாவளியால் பல வீடுகள் சேதம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் இன்று (26) காலை வீசிய மினி சூறாவளியினால் வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேற்குறித்த கிராம சேவகர் பிரிவில் பாலைநகரில் இரு வீடுகளும் அறபாநகரில் ஒரு வீடுமாக மொத்தம் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பங்களை கிராம சேவை உத்தியோகத்தர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் இது தொடர்பாக மேலதிகாரிகளுக்கு அறிவித்தும் உள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் வெள்ளப்பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், மட்டகளப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.