பட்டிருப்பு வலய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள்

மண்டூர்13விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 40மாணவர்களுக்கும்
மண்டூர் 14 சக்தி மகா வித்தியாலத்தினைச் சேர்ந்த30 மாணவர்களுக்குமாக மொத்தம் 70 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தஜானா ஜூவல்லரி. உரிமையாளரான
யோகலிங்கம், உமாகாந்தன் அவர்களின் தனிப்பட்ட நிதி உதவியில்,அவர்களின் குழந்தைகளான
செல்வி,தஜானா
செல்வன்.ஜஷ்விக்
செல்வன்.ஜஷ்விர்,இவர்களின்
பிறந்தநாளை முன்னிட்டு இவ் உதவிகள் அதி கஸ்ரத்திலும்,தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு பாடசாலைக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன .

பாடசாலையின் அதிபர் வி.செளஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இணைந்த கரங்கள் உறுப்பினர்கள் காந்தன், சனாதனன், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.