மன்னார் பொது வைத்தியசாலையில் மகற்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணம். இதனால் மக்கள் கொதித்தெழுந்து வைத்தியசாலைக்கு படையெடுப்பு. பூரண விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்தற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் செவ்வாய் கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது
மன்னார் பட்டித்தோட்டத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் (வயது 29) ஒருவரை திங்கள் கிழமை (18) அதிகாலை மன்னார் பொது வைத்தியசாலையில் மகற்பேறுக்காக சேர்த்துள்ளனர்.
பின் செவ்வாய் கிழமை (19) மாலை பிரசவம் நடைபெற்றபோது குழந்தை இறந்து பிறந்ததுடன் சிறிது நேரத்தில் தாயும் இறந்துள்ளார்.
இச்செய்தி உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டபின் மக்கள் அதிகமானோர் வைத்தியசாலைக்கு படையெடுத்தமையால் வைத்தியசாலை அல்லோல்லகல்லோலமாக காணப்பட்டது.
இருவரினதும் மரணத்தின் மர்மம் என்ன என்பதை hண்டு பிடிக்கப்பட வேண்டும் என மக்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக உடனடியாக பூரண விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகளிலிருந்து அதிகாரிகள் புதன்கிழமை (20) வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வட மாகாண ஆளுநர் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
அண்மை காலத்தில் இவ்வாறு இதே வைத்தியசாலையில் ஒரு இளம் தாயின் பிரசவத்தின்போது சரியான பராமரிப்பு இன்மையால் தாய் இறந்துள்ளார் என்று விசாரணையின் மூலம் தெரிய சந்ததைத் தொடர்ந்து அங்கு கடமையில் இருந்தவர்கள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொது வைத்தியசாலை பிரசவ விடுதியில் சரியான பராமரிப்பு இல்லாமையால் பலர் இவ்வாறான அசௌரியங்களுக்கு உள்ளாகி வருவதாக அச்சம் எற்பட்டுள்ளதால் மகற்பேறுக்கு செல்லுபவர்கள் அச்சநிலை கொண்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.